Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான களக்காடு தலையணையில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு இன்று முதல் வனத்துறை தடை விதித்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள களக்காடு தலையணைக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் இந்தப் பகுதியில் உள்ள அருவி மற்றும் நீரோடைகளில் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் குளித்து வந்தனர்.
இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், வனப்பகுதியின் பாதுகாப்பு கருதியும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி இனி வரும் நாட்களில் களக்காடு தலையணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அந்த இடத்தின் இயற்கை அழகை பார்வையிட மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீரில் இறங்கி குளிக்கவோ, ஆற்றில் நீண்ட நேரம் இருக்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வனத்துறையின் இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b