Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 01 ஆகஸ்ட் (ஹி.ச.)
தேனி மாவட்டம், தேவாரத்தை சேர்ந்தவர் மணிகுமார் (39) கூலித்தொழிலாளியான இவருக்கு சந்திரகலா (35) என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக குடும்பப் பிரச்சினையினால், ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதில், சந்திரகலா திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் குழந்தைகளுடன் தங்கி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று அதிகாலை சந்திரகலா அவரது 13 வயது மகள் சஞ்சனாஸ்ரீ ஆகிய இருவரும் திருப்பூரில் இருந்து தேவாரத்திற்கு அரசு பேருந்தில் வந்து கொண்டிருந்தனர்.
மனைவி மற்றும் மகள் அரசு பேருந்தில் தேவாரம் வருவதை தெரிந்து கொண்ட மணிகுமார், வத்தலக்குண்டு சென்று, காளியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் தயாராக நின்று கொண்டிருந்தார்.
மனைவி, குழந்தைகள் வந்த பேருந்து காளியம்மன் கோவில் நிறுத்தத்தில் நின்ற போது, பேருந்தில் ஏறிய மணிக்குமார், தான் தயாராக மறைத்து வைத்திருந்த அருவாளை எடுத்து ஓடும் பேருந்தில் மனைவி மற்றும் குழந்தையை சரமாரியாக வெட்டியுள்ளார்.
அப்போது, பேருந்தில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால் பேருந்து ஓட்டுநர் பேருந்தை, வத்தலக்குண்டு காவல் நிலையம் அருகே நிறுத்தினார்.
அப்போது, மணிகுமார் பேருந்தில் இருந்து கிழே இறங்கி தப்பி ஓட முயன்றார். பேருந்தில் பயணித்த சகபயணிகள் பிடித்து அவரை வத்தலக்குண்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மேலும், மனைவி, குழந்தையை ஓடும் பேருந்தில் வெட்டிய, மணிகுமாரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
படுகாயம் அடைந்த சந்திரகலா அவரது மகள் சஞ்சனாஸ்ரீ ஆகிய இருவரும் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN