Enter your Email Address to subscribe to our newsletters

உத்தரபிரதேசம், 01 ஆகஸ்ட் (ஹி.ச.)
பாஜக ஆதரவாளர்கள் தற்போது பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டாலும், அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளமான எக்ஸில் அவர் வெளியிட்ட பதிவில்,
மக்களிடம் மன்னிப்பு கேட்க மற்றவர்களை நிர்பந்திப்பதும், கருத்துகளை மாற்ற வற்புறுத்துவதும் பாஜகவின் பழைய மற்றும் எதிர்மறையான அரசியல் யுக்தியாகும்.
இதுபோன்ற செயல்கள் பாஜக மீதான மக்களின் கோபத்தையும் அதிருப்தியையும் மேலும் அதிகரிக்கின்றன, என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மக்கள் தற்போது தங்களது எதிர்ப்பை வெளிப்படையாகச் சொல்லாமல் மனதில் வைத்திருக்கிறார்கள். இதன் விளைவாக, பாஜக ஆதரவாளர்களும், அவர்களுடன் தொடர்புடையவர்களும் மேலும் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.
இறுதியில், பாஜக அரசை அதன் அகங்காரமே வீழ்த்தும், என அகிலேஷ் யாதவ் தனது பதிவில் விமர்சித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P