Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள நாசரேத்தில் நடைபெற்ற திமுக பாக முகவர்கள் கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார்.
கூட்டத்தில் பேசிய அவர்,
தற்போதைய தமிழக அரசை விமர்சித்ததுடன், காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக முதல்வர் விஜய் கர்நாடகா செல்லப்போவதாக கூறியிருப்பதை குறிப்பிட்டு, அவர் கர்நாடகாவிற்கு சென்றால் அங்கு பிடித்து கட்டி வைத்துவிடுவார்கள் என்று பேசினார்.
மேலும், தேவையில்லாமல் அந்த மாநிலத்திற்குச் சென்று ஒப்பந்தம் செய்து தமிழகத்தின் நலன் பாதிக்கப்படக் கூடாது என்றும், காமராஜர் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்றும் விமர்சித்தார்.
அனிதா ராதாகிருஷ்ணனின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் விஜய் குறித்து அவர் முன்னர் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / GOKILA arumugam