Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)
நாடு முழுவதும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் (IOC, BPCL, HPCL) ஒவ்வொரு மாதமும் எல்பிஜி சிலிண்டர் விலையை சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் மாற்றி அமைத்து வருகின்றன.
அதன்படி, ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விலைப்பட்டியலில், 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டரின் விலை
ரூ.200-க்கும் மேல் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இதுவரை ரூ.3,106-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 19 கிலோ வணிக சிலிண்டர், ரூ.200 குறைக்கப்பட்டு தற்போது ரூ.2,906-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை குறைப்பு, ஹோட்டல்கள், உணவகங்கள், டீக்கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் வீட்டு சிலிண்டர் வழக்கம்போல் ரூ.957.50-க்கே விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஜூலை மாதத்திலும் வணிக எல்பிஜி சிலிண்டர் விலை குறைக்கப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்திலும் மீண்டும் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் தொடர்ந்து இரண்டாவது மாதமாக வணிக சிலிண்டர் விலை குறைந்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam