காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் பயிற்சி முகாம் - ராகுல் காந்தி பங்கேற்பு
சென்னை, 01 ஆகஸ்ட் (ஹி.ச) ''இயக்க மறு சீரமைப்பு திட்டம்'' என்ற பெயரில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமையில் ஜூலை 23 ஆம் தேதி முதல் சென்னை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பயிற்சி கூட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று அந்த பயிற்சி கூட்டத்தில் இற
Congress District Office-Bearers' Training Camp – Rahul Gandhi Participates


சென்னை, 01 ஆகஸ்ட் (ஹி.ச)

'இயக்க மறு சீரமைப்பு திட்டம்' என்ற பெயரில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமையில் ஜூலை 23 ஆம் தேதி முதல் சென்னை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பயிற்சி கூட்டம் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று அந்த பயிற்சி கூட்டத்தில் இறுதி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் கலந்துகொள்ள நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்துள்ளார்.

சென்னை விமான நிலையம் வந்த அவரை தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். இன்று மாலை 4 மணியளவில் மாமல்லபுரத்தில் நடைபெறும் அந்த நிகழ்வுக்கு பிறகு காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடன் தமிழகத்தின் அரசியல் சூழல்கள் குறித்து ராகுல் காந்தி உரையாட உள்ளார்.

தற்போது பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ள ராகுல் கட்சியினருக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்க இருக்கிறார்.

காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் பயிற்சி முகாமில் மூன்று மணி நேரம் செலவிட இருக்கிறார்.

இந்த பயிற்சி முகாம் நிறைவடைந்ததும், மாவட்டத் தலைவர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரைத் தனித்தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடி குழுப் புகைப்படமும் எடுக்கஉள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் 74 மாவட்டத் தலைவர்கள் மட்டுமே இந்த முகாமில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b