Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்நாடு காவல்துறையினருக்கான பதக்க வழங்கும் விழாவில், மாநிலத்தின் பெருமைக்குரிய அண்ணா மற்றும் காந்தி காவல் பதக்கங்கள் உரிய முக்கியத்துவம் பெறவில்லை என்றும், ஒன்றிய உள்துறை அமைச்சரின் பதக்கத்திற்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் திமுக கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக திமுக தனது எக்ஸ் தளப் பதிவில்,
முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையில் நடைபெறும் பதக்க வழங்கும் விழாவில், தமிழ்நாட்டின் பெருமையை பிரதிபலிக்கும் அண்ணா காவல் பதக்கமும், காந்தி காவல் பதக்கமும் முதன்மை பெற வேண்டியவை எனக் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், அந்த இரு பதக்கங்களையும் புறக்கணித்துவிட்டு, விழா மேடையின் பின்னணியில் ஒன்றிய உள்துறை அமைச்சரின் பதக்கத்திற்கு மட்டும் பிரம்மாண்ட விளம்பர பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், தமிழ்நாட்டின் காவல்துறையினருக்கு வழங்கப்படும் மாநில விருதுகளே பெருமைக்குரியவை என்றும், அவற்றை விடுத்து ஒன்றிய அரசின் பதக்கத்தை மட்டும் முன்னிலைப்படுத்தியது மாநிலத்தின் மாண்பை அவமதிக்கும் செயலாகும் என்றும் திமுக விமர்சித்துள்ளது.
தனது மாநிலத்தின் பதக்கங்களின் பெருமையைக் கூட பாதுகாக்க முடியாத அரசால், தமிழ்நாட்டின் உரிமைகளை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்றும் திமுக தனது எக்ஸ் தளப் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ