Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)
திமுகவில் அமைப்பு ரீதியான மாவட்ட மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஈரோடு மத்திய மாவட்ட அமைப்பில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று
வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தற்போது ஈரோடு மத்திய மாவட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்த பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி, இனி ஈரோடு தெற்கு மாவட்டக் கழகத்துடன் இணைக்கப்படுகிறது.
அதேபோல், பவானி சட்டப்பேரவைத் தொகுதி, ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத்துடன் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மறு சீரமைப்பின் மூலம், ஈரோடு மத்திய மாவட்டத்தின் எல்லைகள் மற்றும் நிர்வாக அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், அந்த மாவட்டத்தின் பொறுப்பாளராக இருந்த தோப்பு வெங்கடாசலம், ஈரோடு மத்திய மாவட்டப் பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேலும், கட்சியின் நிர்வாக வசதியை மேம்படுத்தவும், மாவட்ட அளவிலான செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தவும் இந்த அமைப்பு மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
புதிய நிர்வாக அமைப்பின்படி, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஒருங்கிணைந்து கட்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், கழகத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தனது அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ