Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழகம் முழுவதும் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் இந்த மாத இறுதிக்குள் நடத்தப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கூறியதாவது:
மாநிலத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பணியாளர் கூட்டுறவு சங்கங்கள், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து வகை கூட்டுறவு சங்கங்களுக்கும் படிப்படியாக தேர்தல் நடத்த அரசு முடிவு செய்துள்ளது.
தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. தேர்தல் அட்டவணை மற்றும் வேட்புமனு தாக்கல் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்
என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்கவும், சங்கங்களின் நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தவும் இந்த தேர்தல் உதவும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b