கூடலூரில் காட்டு யானை தாக்கி தேயிலைத் தோட்டத் தொழிலாளி பலி
நீலகிரி, 01 ஆகஸ்ட் (ஹி.ச.) நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள தேவாலா டேன்ட்டி 3 கொடிமரம் கரிய சோலை அருகே காப்பி தோட்டத்தில் பாலசுப்பிரமணியம் (65) சக தொழிலாளர்களுடன் பணியில் ஈடுபட்டிருந்தார் . மழை பெய்து வருவதால் கடும் மேகமூட்டத்திற்கிடையே தேயில
Death


நீலகிரி, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள தேவாலா டேன்ட்டி 3 கொடிமரம் கரிய சோலை அருகே காப்பி தோட்டத்தில் பாலசுப்பிரமணியம் (65) சக தொழிலாளர்களுடன் பணியில் ஈடுபட்டிருந்தார் .

மழை பெய்து வருவதால் கடும் மேகமூட்டத்திற்கிடையே தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் அனைவரும் பிளாஸ்டிக் ஜரிகைகளை போர்த்தியபடி பணியில் ஈடுபட்டிருந்தனர் .

அப்போது அந்தப் பகுதியில் உலா வந்த யானை திடீரென பாலசுப்பிரமணியத்தை துரத்தி தாக்கியுள்ளது. இதில் நிலை தடுமாறி தேயிலைத் தோட்டத்திற்குள் விழுந்த அவரை யானை தாக்கியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் உடலை மீட்டு பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் அடிக்கடி யானைகள் தாக்கி மனித உயிர் பலியாகும் சம்பவங்கள் கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அரங்கேறி வருவது மக்களிடையே ஒவ்வொரு நாளும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது .

Hindusthan Samachar / ANANDHAN