பட்ஜெட் ரகசியம் மீறப்பட்டதா? -வேளாண்துறை அமைச்சர் மீது அதிமுக சரமாரி கேள்வி
சென்னை, 01 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழக அரசின் வேளாண்துறை அமைச்சரை குறிவைத்து, பட்ஜெட் ரகசியம் தொடர்பாக அதிமுக கடும் விமர்சனம் முன்வைத்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில், சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக பட
அதிமுக


சென்னை, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழக அரசின் வேளாண்துறை அமைச்சரை குறிவைத்து, பட்ஜெட் ரகசியம் தொடர்பாக அதிமுக கடும் விமர்சனம் முன்வைத்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுக தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில்,

சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக பட்ஜெட் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த அரசு ஆவணங்கள் எந்த பொதுவெளியிலும் வெளிப்படுத்தப்படக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளது.

ஆனால், சட்டமன்றத்தில் இதுவரை தாக்கல் செய்யப்படாத நிதிநிலை அறிக்கையை தமிழக மாநில எல்லைக்கு வெளியே கொண்டு சென்று, ஆந்திரப் பிரதேசம் திருப்பதியில் வைத்து பூஜை செய்ததாகவும், இது நடைமுறைகளுக்கும் விதிகளுக்கும் முரணான செயல் என்றும் அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், பூஜை நடத்தும் நோக்கில் நிதிநிலை அறிக்கை அமைச்சர் கையிலிருந்து பிறரிடம் சென்றிருக்கும் என்றும், அது உண்மையாக இருந்தால் ரகசிய ஆவணத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்றும் அதிமுக தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த நடவடிக்கை ரகசியக் காப்பு பிரமாணத்திற்கும், சட்டமன்ற நடைமுறை விதிகளுக்கும் முற்றிலும் எதிரானது எனக் கூறியுள்ள அதிமுக, சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது தமிழக அரசும், சட்டமன்ற சபாநாயகரும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதை விளக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P