Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)
இந்திய ஹாக்கி அணியின் ஜெர்சியின் நிறத்தை மாற்றியிருக்கும் முடிவை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளமான எக்ஸில் அவர் வெளியிட்ட பதிவில்,
இந்திய ஹாக்கி அணியின் ஜெர்சி நிறத்தை மாற்றுவது வெறும் விளையாட்டு சார்ந்த முடிவு மட்டுமல்ல, கோடிக்கணக்கான இந்தியர்களின் உணர்வுகளுடனும், நாட்டின் விளையாட்டு பாரம்பரியத்துடனும் தொடர்புடைய விஷயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வீரர்கள் பல ஆண்டுகளாக Men in Blue, The Blues, The Blue Tigers போன்ற அடையாளங்களால் உலகம் முழுவதும் அறியப்பட்டு வருவதாகவும், அந்த அடையாளம் வெறும் ஜெர்சியின் நிறத்தை மட்டுமல்ல, இந்திய விளையாட்டின் பாரம்பரியத்தையும் பிரதிபலிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று நிறங்களும் தேசியக் கொடியில் இடம்பெற்றுள்ளன என்றும், ஆனால் தேசியச் சின்னங்கள் மற்றும் பொதுநிறுவனங்களில் அரசியல் சாயலைப் பிரதிபலிக்கும் வகையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
ஹாக்கி இந்தியாவின் செயற்குழுவின் அறிவும் ஒப்புதலும் இன்றி இந்த முக்கிய முடிவு எவ்வாறு எடுக்கப்பட்டது என்பதை அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் விளக்க வேண்டும் என்றும், தேசியச் சின்னங்கள், விளையாட்டு மற்றும் வீரர்களை குறுகிய அரசியல் நோக்கங்களுக்கான கருவியாக மாற்றக் கூடாது என்றும் மல்லிகார்ஜுன் கார்கே தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P