Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)
கர்நாடக மாநிலம் குடகு, ஹாசன் மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் அதிதீவிர கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக கர்நாடக மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து நல்ல கன மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகளுக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.
அதேபோல கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து ஓரிரு நாளில் அணையின் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை நிலவரப்படி கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜ சாகர் எனப்படும் கே ஆர் எஸ் அணையின் முழு கொள்ளளவான 124.80 அடியில், நீர் இருப்பு 94.4 அடியாக உள்ளது. நேற்று அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 7058 கன அடியாக இருந்த நிலையில், தொடர் கன மழை காரணமாக இன்று வினாடிக்கு 13 ஆயிரத்து 522 கனஅடியாக உள்ளது. நீர் வெளியேற்றும் 1525 கன அடியாக உள்ளது.
அதேபோல கபினி அணையின் முழு கொள்ளளவான, 2284 அடியில் நீர் இருப்பு ஆனது, 2280.08 அடியாக உள்ளது. நேற்று நீர்வரத்து அணைக்க வினாடிக்கு 9331 கனஅடியாக இருந்த நிலையில், இன்றைய நீர்வரத்து 16,747 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர் வெளியேற்றுமானது தொடர்ந்து வினாடிக்கு 500 கன அடியாகவே நீடித்து வருகிறது. தற்போது கபினி அணையின் நீர் மட்டம் 84 அடியில் 82 அடியை எட்டியுள்ளதால் கபினி அணையிலிருந்து எந்த நேரத்திலும் 8000 கன அடி முதல் 10, 000 கன அடி வரை காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் காவிரி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
தமிழகத்திற்கு காவிரியில் இதுவரை கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
எனினும் தற்போதைய மழைப்பொழிவு காரணமாக அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து வரும் சூழலில் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கான தண்ணீரை ஓரிரு நாட்களில் கர்நாடக அணைகளில் இருந்து திறப்பதற்கான சூழல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN