ஈரோடு புத்தகத் திருவிழாவை மாணவர்கள், வாசகர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - லயோலா மணி அழைப்பு
சென்னை, 01 ஆகஸ்ட் (ஹி.ச.) ஈரோட்டில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் லயோலா மணி அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர
Loyola


Inn


சென்னை, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஈரோட்டில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் லயோலா மணி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயின் ஆதரவுடனும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகனின் வழிகாட்டுதலின்படியும், ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் உள்ள சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 11 வரை நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.

இந்தப் புத்தகத் திருவிழாவில் 147 மற்றும் 148-ஆம் எண் அரங்குகளில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் வெளியீட்டு நூல்கள் இடம்பெற்றுள்ளன என்றும், குழந்தைகளுக்கான நூல்கள், போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், சிறந்த தமிழ் இலக்கிய நூல்கள், ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, வாசகர்கள், மாணவர்கள் மற்றும் புத்தக ஆர்வலர்கள் பெரும் எண்ணிக்கையில் திருவிழாவுக்கு வருகை தந்து, இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று லயோலா மணி தனது எக்ஸ் தளப் பதிவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ