Enter your Email Address to subscribe to our newsletters

சிவகாசி, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)
மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், புதிய தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கான இடங்களை தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா நேரில் ஆய்வு செய்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
பட்டாசு தொழிற்சாலைகள் அதிகம் செயல்படும் பகுதிகளில் நிலவும் அபாய நிலை மற்றும் மக்கள் அடர்த்தி, எதிர்கால தேவைகள் உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு, மிகவும் பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்வதற்காக இரண்டு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாப்பது தனது முதன்மை பொறுப்பு என்றும், அதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிய தீயணைப்பு நிலையம் விரைவில் அமைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கீர்த்தனா கூறியுள்ளார்.
மேலும், மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை வெறும் வார்த்தைகளாக அல்லாமல் செயலாக்கமாக மாற்றுவதே அரசின் நோக்கம் என்றும், மக்கள் நலனும் பாதுகாப்பும் எப்போதும் அரசின் முன்னுரிமையாக இருக்கும் என்றும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P