புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் - முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
சென்னை, 01 ஆகஸ்ட் (ஹி.ச.) 2025–2026 ஆம் ஆண்டிற்கான புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 10-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள ஊடகச் செய்தி அதிர்ச்சி அளிப்பதாகவும், இதை தமிழக அரசு மிகுந்த தீவிரத்துடன் அணுக வேண்
Nainar


Nn


சென்னை, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)

2025–2026 ஆம் ஆண்டிற்கான புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 10-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள ஊடகச் செய்தி அதிர்ச்சி அளிப்பதாகவும், இதை தமிழக அரசு மிகுந்த தீவிரத்துடன் அணுக வேண்டும் என்றும் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியதாவது:

2025–2026 ஆம் ஆண்டிற்கான புதிய முதலீடுகளை ஈர்த்த முதல் 10 மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 10-வது இடத்தில் இருப்பது, மாநிலத்தின் தொழில் முதலீட்டு வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதற்கான சான்று எனக் குறிப்பிட்டார்.

ஒரு காலத்தில் நாங்கள் இப்படி இருந்தோம், அப்படி இருந்தோம் என்று கடந்த கால சாதனைகளை மட்டுமே பேசிக்கொண்டிருந்தால், நிகழ்கால வளர்ச்சியும் எதிர்கால இலக்குகளும் கேள்விக்குறியாகிவிடும் என்று பாஜக தொடர்ந்து எச்சரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

புதிய தொழில் முதலீடுகளுக்கு ஏற்ற சூழலை உருவாக்காமல், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து விளம்பரம் செய்ததோடு மட்டுமே முந்தைய திமுக அரசு தனது ஆட்சிக் காலத்தை கழித்துவிட்டதாகவும், அதன் விளைவாக தற்போது தமிழகம் புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் பின்தங்கியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதன் காரணமாக பெரிய நிறுவனங்கள் பிற மாநிலங்களை நோக்கி நகர்ந்து வருவதாகவும் கூறினார்.

மேலும், முந்தைய திமுக ஆட்சியில் நடந்த தவறுகளிலிருந்து தற்போதைய தமிழக வெற்றி கழக (தவெக) அரசு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், பரந்தூர் விமான நிலையம் உள்ளிட்ட மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களை எதிர்க்கும் போக்கை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அத்துடன், இணைப்பு வசதிகள், உட்கட்டமைப்பு மேம்பாடு, கடன் வசதிகள், தொழில் மானியங்கள் மற்றும் சட்ட அனுமதிகளை எளிமைப்படுத்தி, புதிய முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்க முதல்வர் ஜோசப் விஜய் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ