டாஸ்மாக் முறைகேடு - முன்னாள் மேலாண்மை இயக்குநர் விசாகனை தேடும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ்
சென்னை, 01 ஆகஸ்ட் (ஹி.ச.) டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகனை, லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) போலீசார் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் இரண்டாவது குற்றஞ்சாட்டப்பட்ட நபராக பெயரிடப்பட்டுள்ள விசாகனிடம
லஞ்ச ஒழிப்புத் துறை


சென்னை, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகனை, லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) போலீசார் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கில் இரண்டாவது குற்றஞ்சாட்டப்பட்ட நபராக பெயரிடப்பட்டுள்ள விசாகனிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் முயன்றபோது, அவரது செல்பேசி எண்கள் அனைத்தும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், விசாகனிடம் விசாரணை மேற்கொள்ள அதிகாரிகள் தொடர்புகொள்ள முயன்றுள்ளனர்.

ஆனால், அவரை தொடர்புகொள்ள முடியாததால், அவரை தேடும் பணியில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam