மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை - 5 அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்வு
தென்காசி, 01 ஆகஸ்ட் (ஹி.ச.) தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டுள்ளது.
Kadananathi Dam


தென்காசி, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 அணைகளுக்கும் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில், மாவட்டத்தில் உள்ள பெரிய அணையான அடவிநயினார் கோவில் நீர் தேக்கம் மொத்தமுள்ள 132 அடியில், தற்போது 93 அடியை எட்டியுள்ள நிலையில், அணைக்கு சுமார் 273 கன அடி நீரானது வந்து கொண்டுள்ளது.

அதேபோல், கடனாநதி அணையானது மொத்தமுள்ள 85 அடி உயரத்தில் 62.50 அடியை எட்டியுள்ள நிலையில், அணைக்கு 363 கன அடி நீரானது வந்து கொண்டுள்ளது.

ராமநதி அணையானது மொத்தம் உள்ள 84 அடி உயரத்தில் 60 அடியை எட்டியுள்ள நிலையில், அணைக்கு 200 கன அடி நீரானது வந்து கொண்டுள்ளது.

கருப்பாநதி அணையானது மொத்தமுள்ள 72.10- அடி உயரத்தில் 44.29 அடியை எட்டியுள்ள நிலையில் அணைக்கு 24 கன அடி நீரானது வந்து கொண்டுள்ளது.

மேலும், மாவட்டத்தில் உள்ள மிகச் சிறிய அணையான குண்டாறு அணையானது மொத்தம் 36.10 கன அடியை முழுமையாக எட்டி நிரம்பி வழிந்து வரும் நிலையில், அணைக்கு வரும் 69 கன அடி நீரானது அப்படியே வெளியேறி வருவது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN