குல்காமில் பயங்கரவாத தாக்குதல் - படுகாயமடைந்த 2-வது வெளி மாநில தொழிலாளியும் உயிரிழப்பு
காஷ்மீர், 01 ஆகஸ்ட் (ஹி.ச.) தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள கெல்லம் பகுதியில் நேற்று மாலை வெளி மாநிலங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் தங்கியிருந்த இடத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் படுகாயமடைந
Terrorist attack in Kulgam


காஷ்மீர், 01 ஆகஸ்ட் (ஹி.ச.)

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள கெல்லம் பகுதியில் நேற்று மாலை

வெளி மாநிலங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் தங்கியிருந்த இடத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் படுகாயமடைந்தனர்.

இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த மற்றொரு தொழிலாளி அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்ட போதிலும், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதன் மூலம் இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.

இந்த கொடூர தாக்குதலை அடுத்து, கெல்லம் பகுதியை சுற்றி பாதுகாப்பு படையினர் தீவிர சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் காஷ்மீர் காவல்துறையினர் இணைந்து அப்பகுதி முழுவதும் விரிவான தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர்.

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஷ்மீரில் வெளி மாநில தொழிலாளர்களை குறிவைத்து தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b