Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருவண்ணாமலை அடுத்த அண்டம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ரகு (27). இவரது மனைவி திவ்யா இருவருக்கும் திருமணம் ஆகி ஓராண்டு ஆன நிலையில் தனது பக்கத்து கிராமமான ஆனந்தல் கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கரனுக்கும் திவ்யாவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு தலைமறைவாக திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து இருந்து வந்துள்ளனர்.
தனது மனைவி திவ்யாவை ரகு தேடி வந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக சிவசங்கரன் திருப்பூரில் தனது மனைவி திவ்யாவுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தது தெரிய வந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ரகு அவரது நண்பர்களான சந்தோஷ், ஆசை தம்பி, மாதவன், சுகுமார் ஆகியோர் சிவசங்கரனை கொலை செய்ய திட்டமிட்டு வந்துள்ளார்.
சிவசங்கரன் வேறொரு வழக்கில் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் விசாரணைக்காக கடந்த 30 ஆம் தேதி திருப்பூரில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்தில் வருவதாக தகவல் அறிந்து சிவசங்கரனை கொலை செய்ய திட்டமிட்ட ரகு திருவண்ணாமலை மாவட்ட எல்லையான தானிப்பாடி அடுத்த கொலைமஞ்சனூர் கிராமம் அருகே இருசக்கர வாகனத்தில் அரசு பேருந்தை பின் தொடர்ந்து வந்துள்ளார்.
அதேபோன்று ரகுவின் நண்பர்கள் சிலர் அரசு பேருந்தில் பயணம் செய்ததாகவும் கூறப்படும் நிலையில் அரசு பேருந்து தண்டராம்பட்டு அடுத்த நாலால்பள்ளம் என்ற பகுதிக்கு வந்தபோது இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த அண்டாம்ப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த ரகு (27) கண்ணகுறிக்கை கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் (28), வேளாணந்தல் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆசைத்தம்பி
(28 ), மாதவன்( 24), ஆடையூர் கிராமத்தைச் சேர்ந்த சுகுமார் (22) ஆகியோர் பேருந்தினை வழிமறித்து பேருந்து உள்ளே சென்று மறைத்து வைத்திருந்த அருவாளை கொண்டு சிவசங்கரனை சரமாரியாக வெட்டி உள்ளனர்.
அக்கம் பக்கத்து சீட்டில் இருந்த பயணிகள் மற்றும் பொது மக்கள் கூச்சலிடையே ரகு மற்றும் அவனது கூட்டாளிகள் ஐந்துக்கும் மேற்பட்டோர் அங்கிருந்து தப்பி தலைமறைவாகியுள்ளனர்.
இது தொடர்பாக தண்டராம்பட்டு போலீசார் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்துள்ளனர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவசங்கரனை மீட்டு நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், தற்போது வரை சிவசங்கரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த தண்டராம்பட்டு காவல்துறையினர் சிவசங்கரனை கொலை முயற்சியோடு வெட்டுவதற்கு என்ன காரணம் என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டதில் முதற்கட்ட தகவலாக ரகுவின் மனைவிக்கும் சிவசங்கரனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டு கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு தலைமறைவாக உள்ளது தெரியவந்துள்ளது.
தற்போது இந்த விவகாரம் ரகுவிற்கு தெரிய வரவே சிவசங்கரனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பாக ரகு உள்ளிட்ட 5 பேரை தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
குற்றம் நடந்த 24 மணி நேரத்தில் தண்டராம்பட்டு போலீசார் 5 குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN