டி.என்.பி.எல். கிரிக்கெட்: நேரடி டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்
சென்னை , 01 ஆகஸ்ட் (ஹி.ச.) 8 அணிகள் பங்கேற்கும் 10-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வருகிற 4-ந் தேதி தொடங்கி 28-ந்தேதி வரை 2 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட ஆட்டங்கள் ஆகஸ்ட் 4 முதல் 15-ந்தேதி வரை திண்டு
A


சென்னை , 01 ஆகஸ்ட் (ஹி.ச.)

8 அணிகள் பங்கேற்கும் 10-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வருகிற

4-ந் தேதி தொடங்கி 28-ந்தேதி வரை 2 கட்டங்களாக நடைபெறுகிறது.

முதல் கட்ட ஆட்டங்கள் ஆகஸ்ட் 4 முதல் 15-ந்தேதி வரை திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெறுகின்றன.

தொடர்ந்து, 2-வது கட்ட ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 18 முதல் 28-ந்தேதி வரை நடத்தப்பட உள்ளன.

முதல் கட்டப் போட்டிகளுக்கான நேரடி டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. நத்தம் என்.பி.ஆர். கல்லூரி நுழைவுவாயிலில் அமைக்கப்பட்டுள்ள கவுண்ட்டரில் தினமும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை ரசிகர்கள் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.

போட்டிக்கான ஒரு டிக்கெட்டின் விலை ரூ.200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், District.in இணையதளம் மற்றும் அதன் செயலி மூலமாகவும் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA