Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் இணைவு விழாவில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது,
சேவை செய்வதே எங்களின் ஒரே நோக்கமாக இருக்கும். எந்தச் சூழ்நிலையிலும் ஊழலில் ஈடுபட்டோ அல்லது பிறரிடமிருந்து பணம் வாங்கியோ நாங்கள் கட்சியையோ, அரசையோ நடத்த மாட்டோம். அப்படிப்பட்ட தவறை நாங்கள் செய்தால், தமிழக முதலமைச்சர் விஜய் எங்களை உடனடியாக பதவி நீக்கம் செய்வார் என்பது அனைவருக்கும் தெரியும், என்றார்.
மேலும், 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தனது வைப்புத்தொகையை உறுதி செய்த ஒரே கட்சி தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே.
இன்று நான் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருப்பதற்கு நமது தலைவர் தளபதி மட்டுமே காரணம்.
தி.நகர் தொகுதி மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் நான்கு நாட்கள் மட்டுமே தொகுதியில் பிரச்சாரம் செய்தேன். மற்ற நாட்களில் தலைவருடன் பிரச்சாரத்தில் இருந்தேன். இருந்தபோதிலும், தி.நகர் தொகுதி மக்கள் தலைவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே எனக்கு வாக்களித்தனர்.
மேலும், தி.நகர் மட்டுமல்ல, 234 தொகுதிகளிலும் மக்கள் தலைவர் தளபதியை நம்பி வாக்களித்தனர்.
அவர் முதலமைச்சராக வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தமிழக மக்கள் வாக்களித்தனர்.
அந்த மக்களுக்கு நாங்கள் என்றும் கடன்பட்டிருப்போம், என அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P