Enter your Email Address to subscribe to our newsletters

குண்டூர் , 10 ஆகஸ்ட் (ஹி.ச.)
விஜயவாடா போக்குவரத்து துணை போலீஸ் கமிஷனர் ஷரீன் பேகத்தின் மகள் எம்.டி. அஃபீஃபா (24) சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
அஃபீஃபா தனது நண்பர்களுடன் காரில் சீராலா கடற்கரைக்கு சுற்றுலா சென்றார். குண்டூர் மாவட்டம் எடுகூரு அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டது.
இதனால் பின்னால் வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து லாரியின் மீது வேகமாக மோதியது.
இந்த கோர விபத்தில் அஃபீஃபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காரில் இருந்த மேலும் 4 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சந்திரபாபு நாயுடு இரங்கல்
அஃபீஃபா உயிரிழந்த தகவல் அறிந்த ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
உஜ்வலமான எதிர்காலம் கொண்டிருந்த அஃபீஃபா இளம் வயதிலேயே சாலை விபத்தில் உயிரிழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
டி.சி.பி. ஷரீன் பேகம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்த துயரத்தை தாங்கும் மன வலிமையை இறைவன் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA