Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். தீர்மானத்தின் மீதான உரையை முதலமைச்சர் ஜோசப் விஜய் வாசித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 5ஆம் தேதி தொடங்கிய நிலையில், அன்றைய தினம் நிதி அமைச்சர் மரிய வில்சன் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கிய இந்த கூட்டத்தொடர், சுமார் 21 நாட்கள் என செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார். தொடர்ந்து, ஆக. 6 ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.
ஆகஸ்ட் 7ஆம் தேதி மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு, பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. அதில், எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி உறுப்பினர்களிடையே காரசார விவாதமும், பல சுவாரஸ்ய நிகழ்வுகளும் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு தொடர்பாக நிதியமைச்சர் மரிய வில்சன், பேரவையில் தீர்மானத்தை கொண்டு வந்தார். அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில், சட்டப்பேரவையை ஆக.10 ஆம் தேதிக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ஒத்திவைத்திருந்தார்.
அதனையடுத்து, 2 நாட்களுக்கு பிறகு திங்கட்கிழமையான இன்று, சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடியுள்ளது. இன்று, தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
Hindusthan Samachar / ANANDHAN