சென்னை மாநகராட்சியில் புதிதாக 15 பூங்காக்கள் – இடம் தேர்வு பணி தீவிரம்
சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச) சென்னை மாநகராட்சியில் தற்போது 993 பூங்காக்கள் உள்ள நிலையில், புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் மேலும் 15 பூங்காக்களை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னையில் பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தவெக அரசு நித
Park


சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச)

சென்னை மாநகராட்சியில் தற்போது 993 பூங்காக்கள் உள்ள நிலையில், புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் மேலும் 15 பூங்காக்களை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னையில் பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தவெக அரசு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய பூங்காக்கள் அமைப்பதற்கான இடங்களைத் தேர்வு செய்யும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதன்படி, மாநகராட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் 15 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பூங்காவும் குறைந்தது 50 சென்ட் பரப்பளவில் அமைக்கப்பட வேண்டும் என்பதால், அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு நிலங்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.

இதுவரை 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் 11 இடங்களில் புதிய பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அந்தப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மாநகராட்சி பொறியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ