Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 10 ஆகஸ்ட் (ஹி.ச.)
கோவை குனியமுத்தூரில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் & தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
மேதாது விவகாரம் குறித்து மீண்டும் 16-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் கூட்ட இருக்கிறோம்.
40 TMC தண்ணீர் கடந்த 3 மாதங்களில் நமக்கு வந்து இருக்க வேண்டும். ஆனால் வரவில்லை. குடிநீருக்கு தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். கால்நடைகள் தண்ணீர் இல்லாமல் மடிய கூடிய நிலையில் உள்ளன.
அனைத்து கட்சி கூட்டம் தேவையில்லை, தீர்மானம் போதும் என்று சட்டமன்றத்தில் கூறுகிறார்கள்.
காவேரி நீர் பிரச்சனை என்பது 60 மற்றும் 70-களில் கர்நாடகாவில் அணைகள் கட்டி கொண்டதால் நமக்கு தண்ணீர் பிரச்சனை உள்ளது.
தொகுதி மறுசீரமைப்புக்கு அனைத்து கட்சி கூட்டம் கூட்டுகிறார்கள்.
ஆனால் காவேரிக்கு அனைத்து கட்சி கூட்டம் கூட அறிவிக்காமல் இருக்கிறார்கள். கட்டாயம் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பேசினார்.
Hindusthan Samachar / ANANDHAN