பட்ஜெட்டில் மாற்றத்தை காணவில்லை, ஏமாற்றம்தான் மிஞ்சியது– தி.மு.க எம்.எல்.ஏ. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச) தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான 2-ம் நாள் விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய திமுக எம்.எல்.ஏ. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தமிழக அரசின் பட்ஜெட்டை விமர்சித்து பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். அப்போது பேசிய அவ
Mrk


சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச)

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான 2-ம் நாள் விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய திமுக எம்.எல்.ஏ. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தமிழக அரசின் பட்ஜெட்டை விமர்சித்து பல்வேறு கருத்துகளை முன்வைத்தார்.

அப்போது பேசிய அவர், ஏமாற்றம்தான்..

பட்ஜெட்டில் மாற்றத்தை காணவில்லை; ஏமாற்றம்தான் மிஞ்சியது என அதிருப்தி தெரிவித்தார்.

மேலும், திராவிட இயக்கத்தினர் வெறும் ஆட்சி அதிகாரத்தை மட்டுமே முன்னிறுத்தாமல், தொடர்ந்து கொள்கைகளைப் பேசி மக்களின் மனதில் இடம்பிடித்தவர்கள்.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகால கடந்த 5 ஆண்டுகாலம் தமிழகத்தில் விவசாயிகள் போராட்டம் இன்றி வாழ்ந்தார்கள் என்று கூறிய அவர், விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதன் காரணமாகவே அந்த காலகட்டத்தில் பெரிய அளவில் விவசாயிகள் போராட்டங்கள் நடைபெறவில்லை எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, தற்போதைய பட்ஜெட்டில் மக்களுக்கும், குறிப்பாக விவசாயிகளுக்கும் எதிர்பார்த்த அளவிலான மாற்றங்களும், நலத்திட்டங்களும் இடம்பெறவில்லை என்ற தனது விமர்சனத்தை முன்வைத்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ