FCRA 2026 மசோதாவுக்கு மாணிக்கம் தாகூர் கடும் எதிர்ப்பு
தமிழ்நாடு, 10 ஆகஸ்ட் (ஹி.ச.) FCRA 2026 சட்டத்திருத்த மசோதா வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை அல்ல என்றும், சமூக அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் சுயாட்சியையும் சொத்துக்களையும் பறிக்கும் முயற்சி என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்
மாணிக்கம் தாகூர்


தமிழ்நாடு, 10 ஆகஸ்ட் (ஹி.ச.)

FCRA 2026 சட்டத்திருத்த மசோதா வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை அல்ல என்றும், சமூக அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் சுயாட்சியையும் சொத்துக்களையும் பறிக்கும் முயற்சி என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.

FCRA பதிவுபெற்ற 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமைப்புகளில், 22,496 அமைப்புகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 15,226 அமைப்புகளின் உரிமங்கள் புதுப்பிக்கப்படாமல் காலாவதியாகியுள்ளதாகவும் அவர் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய மசோதாவின் சில பிரிவுகள் மூலம் தொண்டு நிறுவனங்களின் நிதி மற்றும் வெளிநாட்டு நிதியுதவியால் உருவாக்கப்பட்ட பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட சொத்துக்களை அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றும், பின்னர் அவற்றை விற்று அரசு நிதியில் சேர்க்கும் நிலை ஏற்படலாம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கைகள் சிறுபான்மையினர் மற்றும் சமூக நல அமைப்புகளை அதிகம் பாதிக்கும் என்றும், கருத்துச் சுதந்திரத்துக்கும் பாதிப்பு ஏற்படும் என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

எனவே, FCRA 2026 மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் அல்லது நாடாளுமன்றத் தேர்வுக்குழுவின் விரிவான பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam