Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச.)
நடப்பாண்டில் சாதாரண ரக நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3,000 ஆக உயர்த்த வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசு சாதாரண ரக நெல்லுக்கான ஊக்கத்தொகையை ரூ.28 மட்டுமே உயர்த்தியுள்ளது போதுமானதல்ல என்றும், அரசால் கொள்முதல் செய்யப்படும் நெல்லில் 95 சதவீதத்துக்கும் அதிகமானவை சாதாரண ரக நெல் என்பதால் அதற்கான ஊக்கத்தொகையை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு குவிண்டால் நெல் உற்பத்தி செய்ய ரூ.2,300 முதல் ரூ.2,400 வரை செலவாகும் நிலையில், ரூ.2,600 கொள்முதல் விலை போதாது எனக் குறிப்பிட்டுள்ள அன்புமணி இராமதாஸ், நடப்பாண்டில் ரூ.3,000-ம், அடுத்த ஆண்டில் ரூ.3,500-ம் கொள்முதல் விலையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், வரும் கரும்பு அரவைப் பருவத்தில் டன் ஒன்றுக்கு ரூ.4,500 கொள்முதல் விலை கிடைக்கும் வகையில், மாநில அரசின் ஊக்கத்தொகையாக ரூ.1,117 வழங்க வேண்டும் என்றும் தனது அறிக்கையில் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P