லேசாக சரிவைச் சந்தித்த தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச.) ஆகஸ்ட் மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை சற்று ஏறுமுகமாக உள்ளது. அந்த வகையில் நேற்று முன் தினம் ஆகஸ்ட் 8ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,965க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து
தங்கம்


சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஆகஸ்ட் மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை சற்று ஏறுமுகமாக உள்ளது.

அந்த வகையில் நேற்று முன் தினம் ஆகஸ்ட் 8ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,965க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,11,720க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்று தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது.

அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,11,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.11,765க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.94,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.250, ஒரு கிலோ ரூ.2,50,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P