நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்வு - முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு
சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச.) நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, நெல்லுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் விஜய் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீ
நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்வு - முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு


சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச.)

நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, நெல்லுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் விஜய் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் வெளியிட்டார்.

அதன்படி, சன்ன ரக நெல்லுக்கான ஊக்கத்தொகை குவிண்டாலுக்கு ரூபாய் 289 உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் பொது ரக நெல்லுக்கான ஊக்கத்தொகை குவிண்டாலுக்கு ரூபாய் 159 உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்த உயர்வின் மூலம், இனி விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் சன்ன ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 2,750 வழங்கப்படும். பொது ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 2,600 வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, சன்ன ரக நெல்லுக்கு மத்திய அரசின் ஆதரவு விலை ரூ.2,320 உடன், மாநில அரசின் புதிய ஊக்கத்தொகை சேர்க்கப்பட்டு மொத்தமாக ரூ.2,750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதே போல் பொதுரக நெல்லுக்கு மத்திய அரசின் ஆதரவு விலை ரூ.2,300 உடன், மாநில அரசின் புதிய ஊக்கத்தொகை சேர்க்கப்பட்டு மொத்தமாக ரூ.2,600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ஓராண்டுக்குள் நெல்லுக்கான ஊக்கத்தொகையை 156 ரூபாய்க்கும் மேல் உயர்த்தி வழங்குவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வரின் இந்த அறிவிப்பு நெல் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Hindusthan Samachar / vidya.b