Enter your Email Address to subscribe to our newsletters

கோவை10 ஆகஸ்ட் (ஹி.ச.)
கோவை, ரயில் நிலையத்தில் தினமும் ஆயிரக் கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், ரயில்வே நிலையப் பிளாட்பார்ம் பகுதியில் இளம் பெண் ஒருவர் படுத்து உறங்கிக் கொண்டு இருந்து உள்ளார்.
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர், தூங்கிக் கொண்டு இருந்த அந்தப் பெண் அருகில் படுத்துக் கொண்டு அத்துமீறி பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்று உள்ளார்.
இதனால் திடுக்கிட்டு எழுந்த அந்த இளம் பெண், சற்றும் அச்சப்படாமல் உடனடியாக அந்த வாலிபரைத் தைரியமாக எதிர்த்துக் கேள்வி கேட்டு உள்ளார்.
மேலும், பொதுமக்கள் முன்னிலையிலேயே அந்த வாலிபருக்குத் தர்ம அடி கொடுத்துப் பாடம் புகட்டினார்.
அங்கு இருந்த பயணிகள் சிலர் இந்தச் சம்பவத்தைத் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் அதிவேகமாகப் பரவி வருகிறது.
ரயில் நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பு குறித்துக் கேள்விகளை எழுப்பி உள்ள இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாகவும், அவரது தைரியத்தைப் பாராட்டியும் நெட்டிசன்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN