Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 10 ஆகஸ்ட் (ஹி.ச.)
இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளின் சேர்க்கை இளநிலை நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறுகிறது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அரசின் ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 2026 - 2027ஆம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூலை 23ஆம் தேதி வரை பெறப்பட்டது.
மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஜூலை 26 முதல் 27 வரை ஒரு நாள் மட்டும் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, இந்த கல்வியாண்டில் மருத்துவப் படிப்பில் சேர்க்கை பெற 16,199 இடங்களுக்கு 72,627 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மாணவர்கள் விண்ணப்பித்தபோது பதிவேற்றம் செய்த சான்றிதழ்கள் தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கை குழுவின் மூலம் சரிபார்க்கப்பட்டது. மேலும், சரியான சான்றிதழ்களை பதிவேற்றம் வந்த ஆகஸ்ட் 7 வரை மீண்டும் ஒரு அவகாசம் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, தரவரிசை பட்டியலை அமைச்சர் அருண் ராஜ் இன்று வெளியிடுகிறார்
Hindusthan Samachar / VINOTH KUMAR P