விவசாயிகளுக்கு அள்ளித் தருவார்கள் என எதிர்பார்த்தால் கிள்ளித் தருகிறார்கள் - தவெக அரசை சாடிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்நாடு சட்டசபையில் நெல், கரும்புக்கான ஊக்கத்தொகை மற்றும் விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடர்பாக தவெக – திமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், திமுக ஆட்சிய
எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்


சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டசபையில் நெல், கரும்புக்கான ஊக்கத்தொகை மற்றும் விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடர்பாக தவெக – திமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,

திமுக ஆட்சியின் 5 ஆண்டுகளில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், விவசாயிகள் போராட்டம் நடத்தாத நிலை இருந்ததாகவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த தவெக அமைச்சர் நிர்மல் குமார், திமுக ஆட்சியில் விவசாயிகள் போராட்டம் நடத்தும்போது குண்டர் சட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் போராட்டம் ஒடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், புதிய ஆட்சி அள்ளித் தரும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர், ஆனால் கிள்ளித் தருகிறீர்கள் என விமர்சித்தார்.

மேலும், திமுக ஆட்சியில் ரூ.19,500 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், ரூ.21 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்வதாகக் கூறிவிட்டு தற்போது ரூ.6 ஆயிரம் கோடி மட்டுமே தள்ளுபடி செய்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி விவசாயிகள் பெற்ற ரூ.21 ஆயிரம் கோடி கடனையும் தவெக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam