ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து மேஜர் மதன்குமார் பேசுவது தான் உண்மை - அண்ணாமலை
கோவை, 10 ஆகஸ்ட் (ஹி.ச.) கோவை மாவட்டம் ஈச்சனாரி பகுதியில் நடைபெற்ற சுதேசி கோவை மேளாவில் மேஜர் மதன்குமார் எழுதிய சிந்தூர் ஆபரேஷன் புத்தகத்தை We the Leader அமைப்பின் தலைமை சேவகர் அண்ணாமலை வெளியிட்டார். புத்தகத்தை வெளியிட்டு அண்ணாமலை உரையாற்றிய போது,
Annamalai


கோவை, 10 ஆகஸ்ட் (ஹி.ச.)

கோவை மாவட்டம் ஈச்சனாரி பகுதியில் நடைபெற்ற சுதேசி கோவை மேளாவில் மேஜர் மதன்குமார் எழுதிய சிந்தூர் ஆபரேஷன் புத்தகத்தை We the Leader அமைப்பின் தலைமை சேவகர் அண்ணாமலை வெளியிட்டார்.

புத்தகத்தை வெளியிட்டு அண்ணாமலை உரையாற்றிய போது,

ஆபரேஷன் சிந்தூர் குறித்து மேஜர் மதன்குமார் புத்தகம் எழுதி உள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து மேஜர் மதன்குமார் பேசுவது தான் உண்மை.

போரில் என்ன நடக்கிறது உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் தெளிவாக கூறியுள்ளார்.

ராணுவத்தில் எப்படி மக்கள் இருக்கிறார்கள்? எப்படி வாழ்கிறார்கள் உள்ளிட்ட விஷயங்களை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கிறார்.

1980 காலகட்டத்தில் இந்திரா காந்தி பிரதமாரக இருக்கும் போது அப்துல் கலாமிடம் பேசுகிறார்.

5000 கீ.மீ அளவிற்கு ரவுகணை உற்பத்தி செய்ய வேண்டும் கேட்டார். அப்போது ராஜீவ் காந்தி கேட்ட போது, அந்த காலகட்டத்தில் Nuclear Weapon இல்லை.

அதன் பிறகு 1996 அணுகுண்டு சோதனை நடைபெற்றது. அட்டால் பிகாரி வஜ்பாய் பிரதமராக இருந்த போது அப்போது அப்துல் கலாம் யாருக்கும் தெரியாமல் ஆபரேஷன் செய்து ஆப்ரேஷன் வெற்றி என அப்துல் கலாம் கூறினார்.

அதற்காக ஆப்ரேஷன் சிந்தூர் புத்தகத்தை அப்துல் கலாம் குடும்பத்தினர் முன்னிலையில் புத்தகத்தை வெளியீட்ட உள்ளோம்

சிந்தூர் ஆப்ரேஷன்விற்கு 408 மில்லயன் டாலர் இந்திய அரசு செலவு செய்துள்ளது.

இந்தியா 4.1 ரில்லியன் டாலர் அளவிற்கு பொருளாதாரத்தில் உயர்ந்துள்ளது.

பாகிஸ்தான் மொத்தம் பொருளாதாரம் மதிப்பு இந்தியாவில் உள்ள Reliance நிறுவத்தின் அளவிற்கு தான் உள்ளது.

பிரதமர் மோடி 2014 முதல் பிரதமராக உள்ளார் பாதுகாப்பு முக்கியத்துவம் அளித்து வருகிறார்

நமது இந்தியா ராணுவத்தை உலகம் உற்று நோக்கி கொண்டு வருகிறது.

ஏன் தாக்குதல் நடந்தது ?? இந்தியா எப்படி தாக்குதல் நடத்தியது என இந்த புத்தக்கத்தில் உள்ளது என்று பேசினார்.

Hindusthan Samachar / ANANDHAN