தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த அரசின் தனித்தீர்மானத்திற்கு பா.ம.க ஆதரவு
சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச) தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு அனைத்து நிகழ்வுகளிலும் முதலிடம் அளிப்பதை கட்டாயமாக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி தனது முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது. சட்டப்பே
தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த அரசின் தனித்தீர்மானத்திற்கு பா.ம.க ஆதரவு


சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச)

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு அனைத்து நிகழ்வுகளிலும் முதலிடம் அளிப்பதை கட்டாயமாக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி தனது முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார்,

முதலமைச்சரின் இந்த தீர்மானத்தை வரவேற்பதாக கூறினார். தமிழ்த்தாய் வாழ்த்து என்பது வெறும் பாடல் அல்ல, அது தமிழர்களின் உணர்வு மற்றும் அடையாளம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர், பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி விவகாரம் குறித்தும் கடுமையான கருத்துக்களை முன்வைத்தார். பல்கலைக் கழக நிகழ்ச்சிகளில் 'வந்தே மாதரம்' பாடலை பாட வேண்டும் என ஆளுநர் மாளிகை கட்டாயப்படுத்தி வருவதாக குற்றம் சாட்டினார்.

பல்கலைக் கழகங்களின் உரிமையை பாதுகாக்க, துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் முழுமையாக மாநில அரசிடமே இருக்க வேண்டும் என்றும், அந்த அதிகாரத்தை மாநில அரசே ஏற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / vidya.b