புதுச்சேரியில் ஆளுநர் உரை, பட்ஜெட் கூட்டத்தொடரை புறக்கணிப்போம் – தி.மு.க எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம்
புதுச்சேரி, 10 ஆகஸ்ட் (ஹி.ச.) புதுச்சேரியில் நிரந்தர சபாநாயகர் நியமிக்காமல் தற்காலிக சபாநாயகரை வைத்து பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்தினால், ஆளுநர் உரை மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடரை திமுக புறக்கணிக்கும் என அக்கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் தெரிவி
நாஜிம்


புதுச்சேரி, 10 ஆகஸ்ட் (ஹி.ச.)

புதுச்சேரியில் நிரந்தர சபாநாயகர் நியமிக்காமல் தற்காலிக சபாநாயகரை வைத்து பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்தினால், ஆளுநர் உரை மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடரை திமுக புறக்கணிக்கும் என அக்கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில்,

நிரந்தர சபாநாயகரை நியமிக்காமல் தற்காலிக சபாநாயகரை வைத்து பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டினால், ஆளுநர் உரை மற்றும் பட்ஜெட்டை திமுக புறக்கணிக்கும் என கூறினார்.

மேலும், நேற்று நடைபெற்ற தேசியக்கொடி பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசியக் கொடியை பயன்படுத்தி பேரணியை தொடங்கி வைத்தது ஏற்புடையதல்ல என்றும் நாஜிம் விமர்சித்தார்.

அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்ந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்த அவர், தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாக பாடுவதை புதுச்சேரி அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam