புதுச்சேரி எல்லையில் இளைஞர் நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை
புதுச்சேரி, 10 ஆகஸ்ட் (ஹி.ச.) புதுச்சேரி மாநிலம் உருவையாறு பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (31), கடந்த சில நாட்களாக கடலூர்–புதுச்சேரி எல்லைப் பகுதியான ரங்கா ரெட்டிப்பாளையம் பகுதியில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை நண்பர்களுடன்
கொலை


புதுச்சேரி, 10 ஆகஸ்ட் (ஹி.ச.)

புதுச்சேரி மாநிலம் உருவையாறு பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (31), கடந்த சில நாட்களாக கடலூர்–புதுச்சேரி எல்லைப் பகுதியான ரங்கா ரெட்டிப்பாளையம் பகுதியில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சசிகுமார் மீது நாட்டு வெடிகுண்டை வீசி தாக்கியுள்ளனர். தொடர்ந்து, அவரை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த சசிகுமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரெட்டிச்சாவடி காவல்துறையினர் மற்றும் புதுச்சேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலைக்கான காரணம் மற்றும் தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam