தமிழ்மொழியின் பெயரை பிள்ளைகளுக்கு சூட்டி அழகு பார்க்கும் கூட்டம் இது – அமைச்சர் ராஜ்மோகன்
சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்மொழியின் பெயரை தங்களது பிள்ளைகளுக்கு சூட்டி அழகு பார்க்கும் கூட்டம் இது என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்திற்காக தனித் தீர்மானம் கொண்டு வந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு நன்றி த
Rajmo


சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்மொழியின் பெயரை தங்களது பிள்ளைகளுக்கு சூட்டி அழகு பார்க்கும் கூட்டம் இது என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்திற்காக தனித் தீர்மானம் கொண்டு வந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவித்து சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.

அப்போது தமிழ்த்தாய் வாழ்த்தின் சிறப்பை எடுத்துரைத்த அவர், தமிழ்த்தாய் வாழ்த்தில் இடம்பெற்றுள்ள “தமிழ்த்தாயின் முகத்தில் வைத்த பொட்டு எட்டுத்திக்கும் வாசனை வீசுவது போல்” என்ற கருத்தை குறிப்பிட்டார்.

தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்மொழியின் பெருமையையும் சிறப்பையும் வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு தனித் தீர்மானம் கொண்டு வந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர் ராஜ்மோகன், தமிழ்மொழியின் பெயரை தங்களது பிள்ளைகளுக்கு வைத்து அழகு பார்க்கும் அளவுக்கு தமிழ் மீது பற்றும் பாசமும் கொண்டவர்கள் தாங்கள் என்றும் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ