இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மகன் கார் விபத்து- லேசான காயங்களுடன் தப்பினார்
சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச.) பிரபல இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் பாடகர் ஏ.ஆர்.அமீன் குழந்தையிலேயே தன் தந்தையின் இசையில் பாடகராக அறிமுகமானார். 2015ஆம் ஆண்டு ஏ.ஆர்.அமீன் தனது தந்தையின் இசையில், ஓகே கண்மணி படத்தில் படத்தில் பாடி
Reports indicate that music composer A.R. Rahman's son has been involved in a car accident.


சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச.)

பிரபல இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் பாடகர் ஏ.ஆர்.அமீன் குழந்தையிலேயே தன் தந்தையின் இசையில் பாடகராக அறிமுகமானார்.

2015ஆம் ஆண்டு ஏ.ஆர்.அமீன் தனது தந்தையின் இசையில், ஓகே கண்மணி படத்தில் படத்தில் பாடிய மௌலா யா எனும் பாடல் பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்தது.

அதனைத் தொடர்ந்து தன் தந்தை ஏஆர் ரஹ்மானின் இசையில் தொடர்ந்து பாடல்களைப் பாடி வரும் அமீன், யுவன் சங்கர் ராஜாவின் இசையிலும் பாடியுள்ளார்.

மேலும் தனி இசைப்பாடகராகவும் வலம் வருகிறார்.

இந்நிலையில், சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே ஏ.ஆர்.அமீனின் கார் இன்று அதிகாலையில் விபத்தில் சிக்கியது.

ஏ.ஆர்.அமீன் மற்றும் அவரது நண்பருடன் கோயம்பேட்டில் இருந்து வந்த சொகுசு கார், எதிரே வந்த கால் டாக்சி மீது மோதியது.

இந்த விபத்தில் ஏஆர் அமீன், அவரது நண்பர் பார்கவ், கால் டாக்சி டிரைவர் ஆகிய அனைவரும் லேசான காயங்களுடன் தப்பி உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b