Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 10 ஆகஸ்ட் (ஹி.ச.)
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த முறையில் பணியாற்றி வருகின்றனர். குறைந்த ஊதியத்தில், பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி, நாள்தோறும் அதிகாலையில் இருந்து நள்ளிரவு வரை பணியாற்றி வரும் இவர்கள், நீண்ட காலமாக பணி நிரந்தரம் கோரி வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தங்களது கோரிக்கைகளை அரசு கண்டுகொள்ளவில்லை எனக்கூறி, இன்று காலை முதல் சேலம் கோட்டை மைதானத்தில் ஒன்று திரண்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூய்மைப் பணியை தனியாருக்கு ஒப்படைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும், அனைத்து ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணியின் போது தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும், வார விடுமுறை மற்றும் மருத்துவ வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த போராட்டத்தால் சேலம் மாநகர பகுதிகளில் தூய்மைப் பணிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகின்றது.
Hindusthan Samachar / vidya.b