தமிழ் நம் உயிர்,தமிழ் நம் உணர்வு- முதலமைச்சர் ஜோசப் விஜய்
சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ் ஒரு மொழி மட்டுமன்று; அது சிந்தனை, பண்பாடு, நாகரிகம். அதோடு தமிழ் நம் உயிர், தமிழ் நம் உணர்வு என்பதை தமிழ்நாடு அரசு முழுமையாக உணர்ந்துள்ளதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார். தமிழ் மொழியின் தொன்மை, தனித்தன்ம
விஜய்


சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ் ஒரு மொழி மட்டுமன்று; அது சிந்தனை, பண்பாடு, நாகரிகம். அதோடு தமிழ் நம் உயிர், தமிழ் நம் உணர்வு என்பதை தமிழ்நாடு அரசு முழுமையாக உணர்ந்துள்ளதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழியின் தொன்மை, தனித்தன்மை, பெருமை மற்றும் சிறப்பையும், தமிழர்களின் உணர்வையும் போற்றிப் பாதுகாக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், தமிழ்த்தாய்க்குச் செலுத்தப்படும் உயரிய மரியாதை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள் தமிழ்நாட்டின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என்றும், தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்து நிறைவேற்றித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி என்றும் தனது எக்ஸ் பதிவில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

“உலகெங்கும் தமிழ்த்தாயின் புகழ் ஓங்கட்டும்! தமிழ்நாட்டின் வெற்றிப் பயணம் தொடரட்டும்!” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P