Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 10 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்த்தாய் வாழ்த்தை மாநிலப் பாடலாக அங்கீகரித்த வரலாற்றை சுட்டிக்காட்டி, தமிழக அரசை திமுக முன்னாள் எம்பி கனிமொழி சோமு கடுமையாக விமர்சித்துள்ளார்.
1970-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான திமுக அரசு, மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்தை மாநிலப் பாடலாக அங்கீகரித்ததுடன், அனைத்து அரசு விழாக்களிலும் முதலில் பாட வேண்டும் என அரசாணை வெளியிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 2021 டிசம்பர் 17-ஆம் தேதி தமிழ்த்தாய் வாழ்த்தை மாநிலப் பாடலாக அங்கீகரித்து, அரசு மற்றும் பொது நிகழ்வுகளில் முதலில் பாட வேண்டும் என அரசாணை வெளியிட்டது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம் வழங்க வேண்டும் என ஆளுநர் தரப்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகக் கூறிய கனிமொழி சோமு, அதற்கு எதிராக தமிழக அரசு ஏன் போராட்டமோ, கண்டன அறிக்கையோ வெளியிடவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக அரசுகளின் சாதனைகளை அங்கீகரிக்கக் கூட மனமில்லாமல், “70களில் கொண்டுவரப்பட்டது” என பொதுவாகக் கூறுவது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
திமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியதைப் போல, எங்கள் உரிமைப் போராட்ட வரலாற்றிற்கும் ஸ்டிக்கர் அடிக்க நினைக்காதீர்கள்.
ஆயிரம் கரங்கள் மறைத்தாலும் ஆதவன் மறையாத என கனிமொழி சோமு தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P