தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தனித் தீர்மானம் - முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு அமைச்சர் கீர்த்தனா நன்றி
சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்த்தாய் வாழ்த்துக்கு சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டு வந்து, தமிழின் பெருமையையும், தமிழர்களின் உணர்வையும், தமிழ்நாட்டின் மாநில உரிமையையும் நிலைநிறுத்திய முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்க்கு அமைச்சர் கீர்த்தனா நன்றி தெரி
கீர்த்தனா


சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டு வந்து, தமிழின் பெருமையையும், தமிழர்களின் உணர்வையும், தமிழ்நாட்டின் மாநில உரிமையையும் நிலைநிறுத்திய முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்க்கு அமைச்சர் கீர்த்தனா நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

தமிழ் என்பது வெறும் மொழியல்ல,அது நம் வரலாறு, பண்பாடு, அடையாளம், உரிமை என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழ்நாட்டின் பெருமைக்குரிய அடையாளமாக உயர்த்தி, தமிழின் தனித்துவத்தையும் உரிமையையும் சட்டமன்றத்தின் வாயிலாக உறுதிப்படுத்தியிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எந்த நிலையிலும் தமிழின் பெருமையையும், தமிழ்நாட்டின் உரிமையையும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்ற உறுதியான செய்தியை இந்தத் தீர்மானம் வெளிப்படுத்துவதாகவும் அமைச்சர் கீர்த்தனா குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் வாழ்க! தமிழ்நாடு வெல்க!” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam