ஒரே பைக்கில் 100 ஹாரன்கள் பொருத்தம் - பைக்கை பறிமுதல் செய்த போலீசார்!
டேராடூன் , 10 ஆகஸ்ட் (ஹி.ச.) உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கன்வார் யாத்திரையையொட்டி ஹரித்துவாரில் உள்ள சங்கராச்சாரி சவுக் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அதிக சத்தத்துடன் வந்த ஒரு பைக்கை போலீசார் தடுத்து
A


டேராடூன் , 10 ஆகஸ்ட் (ஹி.ச.)

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில்

கன்வார் யாத்திரையையொட்டி ஹரித்துவாரில் உள்ள சங்கராச்சாரி சவுக் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அதிக சத்தத்துடன் வந்த ஒரு பைக்கை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அந்த பைக்கின் முன்புறம் மற்றும் பக்கவாட்டுகளில் அடுக்கடுக்காக சுமார் 100 ஹாரன்கள் பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.

மேலும், அதிக வெளிச்சம் தரும் விளக்குகளும் பொருத்தப்பட்டு, பைக் போக்குவரத்து விதிகளுக்கு மாறாக மாற்றியமைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் அந்த பைக்கால் அதிக அளவில் ஒலி மாசு ஏற்படுவதுடன், சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படும் நிலை இருந்தது.

இதையடுத்து, ஒலி மாசு மற்றும் போக்குவரத்து விதிமீறல் காரணமாக கான்கல் போலீசார் அந்த பைக்கை உடனடியாக பறிமுதல் செய்தனர்.

மேலும், பைக்கை ஓட்டி வந்தவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட பைக்கை போலீஸ் அதிகாரி ஒருவர் ஓட்டிச் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வாகனங்களில் இதுபோன்று சட்டவிரோதமான மற்றும் ஆபத்தான மாற்றங்களை மேற்கொள்ளக்கூடாது என்றும், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA