Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச.)
அனைத்து அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம் வழங்கப்பட வேண்டும் என்ற முதலமைச்சர் த.வெ.க (தலைவர் சி. ஜோசப் விஜய்யின் தனித் தீர்மானத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க) முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இன்று (ஆகஸ்ட் 10, 2026) நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதலிடம் அளிப்பதை கட்டாயமாக்கும் வகையில் முதலமைச்சர் கொண்டு வந்துள்ள தனித் தீர்மானத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முழுமையான ஆதரவை தெரிவித்த விசிக சட்டமன்ற உறுப்பினர் வன்னி அரசு சட்டப்பேரவையில் கூறுகையில்,
தமிழ்நாடு தமிழர் என்ற அடையாளத்தை விதைக்கும் அரசியலே இங்கு என்றும் நீடிக்கும் என்றும், அந்த வகையில் முதலமைச்சர் முன்மொழிந்துள்ள இந்த தனித் தீர்மானம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றும் புகழாரம் சூட்டினார்.
மேலும் இந்து ராஷ்டிரம் என்ற ஒற்றை அடையாளத்தை திணிக்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்தும் வகையில், தமிழ் அடையாளத்தையும், மொழி உணர்வையும் பாதுகாக்கும் அரணாக இந்த தீர்மானம் அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசின் இந்த உறுதியான நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றும் வன்னி அரசு தனது ஆதரவு உரையில் தெரிவித்தார்.
மேலும் அவர் தீர்மானம் குறித்து முதலமைச்சர் பேசியபோது ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் மட்டுமே அதிகமாக கைதட்டி வரவேற்றனர்.
தனித்தீர்மானம் தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து என்பதால் எதிர்க்கட்சி தரப்புமே கைதட்டி வரவேற்கலாமே, தமிழ்தேசியமும், திராவிடமும் ஒன்றென சொல்லும் அபாய சூழலில் தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானம் சிறப்புக்குரியது என்று கூறினார்.
Hindusthan Samachar / vidya.b