Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 11 ஆகஸ்ட் (ஹி.ச.)
பாங்காக்கில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சைபர் குற்றவாளிகளால் ஏமாற்றப்பட்டு மியான்மரில் சிக்கித் தவிக்கும் ஆந்திராவைச் சேர்ந்த இளைஞர்களை பாதுகாப்பாக மீட்டு சொந்த ஊர்களுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அமைச்சர் நாரா லோகேஷ் உறுதியளித்தார்.
ஆந்திராவைச் சேர்ந்த வேலையில்லாத இளைஞர்கள் சிலரிடம், பாங்காக்கில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக சைபர் குற்றவாளிகள் ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.
இதனை நம்பிய இளைஞர்கள் மியான்மருக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அவர்கள் சிக்கித் தவிப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த அமைச்சர் லோகேஷ், தனது அறிக்கையில் கூறியது :
பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும் என்று தெரிவித்தார்.
மேலும், மியான்மரில் சிக்கியுள்ள இளைஞர்களை பாதுகாப்பாக மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆந்திர பவன் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
அவர்களை விரைவாக சொந்த ஊர்களுக்கு அழைத்து வர தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க இளைஞர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் லோகேஷ் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி வரும் விளம்பரங்கள் மற்றும் வாக்குறுதிகளை உடனடியாக நம்பாமல், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்களை முழுமையாக சரிபார்த்த பின்னரே முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
சைபர் குற்றவாளிகள் விரிக்கும் வலையில் இளைஞர்கள் சிக்காமல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் லோகேஷ் வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA