செங்கல்பட்டு அருகே ரூ.20 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் எரித்து அழிப்பு
செங்கல்பட்டு, 11 ஆகஸ்ட் (ஹி.ச.) செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கத்தில் உள்ள ஜி.ஜே. மல்டிகிளேவ் மருத்துவக் கழிவுகள் எரியூட்டும் மையத்தில், “போதைப்பொருட்கள் இல்லா தமிழ்நாடு” என்ற நிகழ்ச்சியின் கீழ் ரூ.20 கோடி மதிப்பிலான கஞ்சா உள்ளிட்ட உயர்ரக போதை
போதைப்பொருள்


செங்கல்பட்டு, 11 ஆகஸ்ட் (ஹி.ச.)

செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கத்தில் உள்ள ஜி.ஜே. மல்டிகிளேவ் மருத்துவக் கழிவுகள் எரியூட்டும் மையத்தில், “போதைப்பொருட்கள் இல்லா தமிழ்நாடு” என்ற நிகழ்ச்சியின் கீழ் ரூ.20 கோடி மதிப்பிலான கஞ்சா உள்ளிட்ட உயர்ரக போதைப் பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டு வருகின்றன.

வடக்கு மண்டல காவல்துறை, சென்னை போதைப்பொருள் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு, ஆவடி மற்றும் தாம்பரம் மாநகர காவல்துறை பகுதிகளில் பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் நீதிமன்ற உத்தரவின்படி அழிக்கப்படுகின்றன.

இதில் 6.6 டன் கஞ்சா, 523 கிராம் நிட்ரோசன் பவுடர், 15 கிராம் மெத்தம்பெட்டமைன், 55 கிராம் கொக்கைன், 50 கிராம் எம்.எம்.டி.ஏ., 100 கிராம் பிரவுன் சுகர், 210 கிராம் நிட்ரசபைம் உள்ளிட்ட 125 கிலோ உயர்ரக போதைப் பொருட்கள் மற்றும் 11,700 போதை மாத்திரைகள் என மொத்தம் ரூ.20 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் எரித்து அழிக்கப்படுகின்றன.

இந்த நிகழ்வில் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, ஆவடி இணை ஆணையர் சிவக்குமார், காஞ்சிபுரம் சரக டிஐஜி ஷஷாங்க் சாய், வேலூர் டிஐஜி மகேஷ், தாம்பரம் இணை ஆணையர் ஜெயந்தி உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam