கோவில் நிதியில் கல்லூரிகள் தொடங்க பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச) கோவில் நிதியை பயன்படுத்தி கல்லூரிகள் தொடங்க முந்தைய திமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், தி
High court


சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச)

கோவில் நிதியை பயன்படுத்தி கல்லூரிகள் தொடங்க முந்தைய திமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், பழனி தண்டாயுதபாணி கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகியவற்றின் சார்பில் நான்கு கல்லூரிகளை தொடங்க அனுமதி அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி, இந்து முன்னணி அமைப்பின் முன்னாள் தலைவர் டி.ஆர்.ரமேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் இ.மனோகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, விளாத்திகுளம் மற்றும் திருச்செங்கோடு ஆகிய இடங்களில் கல்லூரிகளை கட்டுவதற்கு கூடுதல் நிதி தேவைப்பட்டால் அரசின் உதவியை நாடலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், மீதமுள்ள ஆறு கல்லூரிகளை கட்டுவது தொடர்பாக அரசு உரிய முடிவை எடுத்துக்கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

இதையடுத்து, கோவில் நிதியில் கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி அளித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி டி.ஆர்.ரமேஷ் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Hindusthan Samachar / P YUVARAJ