Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச)
நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், அவர்களுக்கு கரப்பான் பூச்சி கட்சியின் தலைவர் அபிஜீத் திப்கே தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
சென்னையில் நீட் எதிர்ப்பு கூட்டியக்கத்தின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
நீட் தேர்வு கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை பறிப்பதாகவும், மாநில உரிமைகளுக்கு எதிரானதாகவும் குற்றம் சாட்டி இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த போராட்டக் களத்தில் இருக்கும் மாணவர்களுடன் கரப்பான் பூச்சி கட்சித் தலைவர் அபிஜீத் திப்கே காணொளி வாயிலாக உரையாடியுள்ளார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டு மாணவர்களின் நியாயமான கோரிக்கையை தான் முழுமையாக ஆதரிப்பதாகவும், கல்வி என்பது மாநிலங்களின் உரிமை சார்ந்தது என்றும் தெரிவித்தார். நீட் தேர்வுக்கு எதிரான தமிழக மாணவர்களின் போராட்டம் நாடு முழுவதும் கவனம் பெற வேண்டும் என்றும், தங்கள் கட்சி எப்போதும் மாணவர்களின் பக்கம் நிற்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
Hindusthan Samachar / vidya.b